Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அங்கெலா மெர்க்கலை இடைமறித்தவரால் நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பு

In ஐரோப்பா
Updated: 11:18 GMT, Mar 14, 2018 | Published: 11:17 GMT, Mar 14, 2018 |
0 Comments
1116
This post was written by : Elakkiya

பேர்லின் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேறிய ஜேர்மனிய அதிபர் அங்கெலா மெர்க்கலை இனந்தெரியாத நபர் இடைமறிக்க முயற்சித்த சம்பவம் நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று (புதன்கிழமை) நாடாமன்றில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் ஜேர்மனிய அதிபராக நான்காவது முறையாகவும் மெர்க்கலே தெரிவுசெய்யப்பட்டுள்ளார். வாக்கெடுப்பை தொடர்ந்து நாடாளுமன்றிலிருந்து மெர்க்கல் வெளியேறிய போதே குறித்த நபர் ‘ தயவு செய்து என்னை காப்பாற்றுங்கள்’ என்று சத்தமிட்டவாறே மெர்க்கலை இடைமறிக்க முயற்சித்துள்ளார்.

இதன் போது இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் குறித்த நபரை மடக்கி பிடித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய நாடாளுமன்ற வாக்கெடுப்பில் 364 உறுப்பினர்கள் மெர்கலுக்கு ஆதரவாகவும் 315 பேர் எதிராகவும் வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg