Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கமல்ஹாசனின் இணையத்தளத்தை தவறாக பயன்படுத்துபவர் யார்?

In இந்தியா
Updated: 11:36 GMT, Mar 14, 2018 | Published: 11:36 GMT, Mar 14, 2018 |
0 Comments
1208
This post was written by : Kemasiya

கமல்ஹாசன் உண்மையான தலைவர் என்றால் அவரின் இணையத்தளத்தை யார் தவறாக பயன்படுத்தினார் என்பதை முதலில் கண்டுபிடிக்கட்டும் என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஈரோட்டில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்தும் தெரிவித்த தமிழிசை:-

கமலின் கட்சியில் உறுப்பினராக சேரவேண்டிய எந்த அவசியமும் எமக்குக் கிடையாது. யாரை பார்த்து படம் காண்பிப்பதாக கூறுகிறார்கள்? இத்தனைக் காலமும் படம் காண்பித்தது யார் என்பதை மறந்து விட்டு பேசுகிறார்களா என கேள்வியெழுப்பினார்.

நாங்கள் தூய்மையான அரசியல் நடத்தி வருகின்றோம். எனவே முதலில் தம்முடைய இணையத்தளத்தில் என்ன தவறு நடக்கிறது என்பதை கமல்ஹாசன் அவதானித்துவிட்டு பேசவேண்டும்”    எனத் தமிழிசை தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg