Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இராணுவத்தின் இரண்டாம் நிலை தளபதி பதவிக்கு வெற்றிடம்!

In இலங்கை
Updated: 11:55 GMT, Mar 14, 2018 | Published: 11:55 GMT, Mar 14, 2018 |
0 Comments
1088
This post was written by : Risha

இலங்கை இராணுவத்தின் இரண்டாம் நிலை தளபதி பதவி வெற்றிடமாகியுள்ளது.

இலங்கை இராணுவத் தலைமை அதிகாரியான மேஜர் ஜெனரல் அமால் கருணாசேகர, நேற்று (செவ்வாய்க்கிழமை) ஓய்வு பெற்றுள்ள நிலையிலேயே இப்பதவி வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

இவருக்கான அணிவகுப்பு மரியாதையுடன் கூடிய பிரியாவிடை நிகழ்வு பனாகொடவில் உள்ள இலகு காலாட்படை தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது.

தற்போது வெற்றிடமாகியுள்ள பதவிக்கு மூன்று மூத்த மேஜர் ஜெனரல்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், ஜப்பானுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும் இராணுவ தலைமை வெற்றிடம் நிரப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை வழக்கில் தற்போது ஓய்வுபெற்றுள்ள மேஜர் ஜெனரல் அமால் கருணாசேகரவிடம் விசாரணை நடத்தப்பட்டிருந்த நிலையில் அவர் கைது செய்யப்படக்கூடும் என்றும் தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg