Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆப்கானில் சோதனைச் சாவடியை இலக்கு வைத்து தாக்குதல்- 10 பேர் உயிரிழப்பு

In உலகம்
Updated: 11:39 GMT, Mar 14, 2018 | Published: 11:39 GMT, Mar 14, 2018 |
0 Comments
1178
This post was written by : Elakkiya

மேற்கு ஆப்கானிஸ்தானில் அரச சோதனைச் சாவடியை இலக்கு வைத்து கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் குறைந்தது பத்து பாதுகாப்பு அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற தாக்குதலில் ஆறு உளவுப்பிரிவு அதிகாரிகளும் ஆறு பொலிஸ் அதிகாரிகளும் உயிரிழந்துள்ளதாக ஃபராஹ் மாகாண சபை உறுப்பினர் அப்துல் சமாட் சலேஹி தெரிவித்துள்ளார்.

தூக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. எனினும் ஃபராஹ் மாகாணத்தில் கடந்த சில வாரங்களாக பாதுகாப்பு அதிகாரிகளை இலக்கு வைத்து தலிபான் தீவிரவாதிகளே தாக்குதல்களை நடத்தி வருகின்ற நிலையில் இன்றும் அவர்களே தாக்குதல் நடத்தியிருப்பர் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg