Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மூவின மக்களும் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாத நிலை : மோகன் சுப்பிரமணியம்!

In இலங்கை
Updated: 11:51 GMT, Mar 14, 2018 | Published: 11:51 GMT, Mar 14, 2018 |
0 Comments
1130
This post was written by : Ravivarman

மூவின மக்களும் பாடுபட்டுப் பெற்ற சுதந்திரத்தை முழுமையாக அனுபவிக்க முடியாத நிலை இலங்கையில் உள்ளதாக இலங்கை கம்னியூஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் மோகன் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இலங்கை கம்னியூஸ்ட் கட்சியின் ஹற்றன் பிராந்தியக் காரியாலயத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘இந்த நாட்டில் 2015ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட நல்லாட்சி அரசாங்கம் ஒரு வேலைத் திட்டமாக இனங்களுக்கிடையே ஒரு நல்லுறவை ஏற்படுத்துவதற்கு நல்லிணக்கம் என்ற ஒரு செயல்பாட்டை கொண்டு வந்தார்கள்.

இனங்கள் மத்தியில் ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டது. இந்த அரசாங்கம் நல்லிணக்க செயல்பாட்டை வெகுவாக செய்திருந்தால் இத்தகைய இனகலவரம் ஏற்பட்டிருக்காது.

ஆகவே கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற இனகலவரத்திற்கு இலங்கை கம்னியூஸ்ட் கட்சி தனது கண்டனத்தினைத் தெரிவிக்கின்றது. வரலாற்றில் இலங்கை சுதந்திரமடைவதற்கு தமிழ், முஸ்லிம், சிங்கள ஆகிய மூவின மக்களும் போராடி நாட்டின் சுதந்திரத்தைப் பெற்றுள்ளனர். இருந்தும் மூவின மக்களும் இந்த சுதந்திரத்தை அனுபவிக்க முடியாத சூழ்நிலை இன்று காணப்படுகின்றது.

எதிர்காலத்தில் சிறுபான்மை மக்களை பாதுகாப்பதற்கான விசேட திட்டங்களை அரசாங்கம் உருவாக்க வேண்டும். மதவாத, இனவாத சக்திகளை இணங்கண்டு அவர்களுடைய செயற்பாடுகளைத் தடை செய்வதற்கும், இன முரண்பாடுகளைத் தூண்டுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்’ என அவர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg