Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரு மக்களவைத் தொகுதிகளில் சமாஜ்வாடி கட்சி வெற்றி!

In இந்தியா
Updated: 16:29 GMT, Mar 14, 2018 | Published: 13:25 GMT, Mar 14, 2018 |
0 Comments
1140
This post was written by : Ravivarman

உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர், புல்புர் தொகுதிகளில் சமாஜ்வாடி கட்சியும், பீகாரின் அராரியா தொகுதியில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியும் பா.ஜ.க.வை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளன.

உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூர், புல்புர் மற்றும் பீகார் மாநிலம் அராரியா மக்களவைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.

கோரக்பூர் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் உபேந்திர தத் சுக்லாவை சுமார் 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜ்வாதி வேட்பாளர் பிரவீன் குமார் நிஷாத் தோற்கடித்தார்.

மேலும் கோரக்பூர் தொகுதியில் கடந்த ஐந்து முறையும் நடந்த தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றிருந்த நிலையில் புல்புர் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளரை சுமார் 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜ்வாதி கட்சியின் நாகேந்திர பிரதாப் சிங் தோற்கடித்தார்.

இதேவேளை கோரக்பூர் மற்றும் புல்புர் தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் கட்டுப்பணத்தினை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg