Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தொண்டைமானாறு உவர்நீர் தடுப்பணை வேலைகள் விரைவில் நிறைவடையும்: பிறேம்குமார்

In இலங்கை
Updated: 16:37 GMT, Mar 14, 2018 | Published: 16:37 GMT, Mar 14, 2018 |
0 Comments
1103
This post was written by : Ravivarman

யாழ்ப்பாணம் தொண்டைமானாறு உவர் நீர் தடுப்பணை வேலைத்திட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம்15ஆம் திகதிக்கு முன்னர் நிறைவடையும் என வடமாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் பிறேம்குமார் தெரிவித்துள்ளார்.

வடமாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்களிற்கான திட்டத் தெளிவூட்டல் கருத்தமர்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘மகாவலி மற்றும் சுற்றாடல் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுவரும் அணைக்கட்டு மற்றும் நீர்வழங்கல் கருத்திட்டமிடல் திட்டத்தின் கீழ் உலக வங்கியின் நிதியில் 400 மில்லியன் ருபாய் செலவில் தொண்டைமானாறு உவர் நீர் தடுப்பணை திருத்தியமைக்கப்பட்டு வருகின்றது.

1960ம் ஆண்டுகளில் கட்டப்பட்ட தொண்டைமானாறு உவர் நீர் தடுப்பணை யுத்தம் காரணமாக முறையான பராமரிப்பின்மையால் பழுதடைந்த நிலையில் நன்நீருடன் உவர் நீர் கலக்கும் அபாய நிலையில் காணப்பட்டது.

தற்போது துருப்பிடிக்காத உலோகங்களால் ஆன கதவுகள் இடப்பட்ட அணை போடப்பட்டு வருகின்றது இதன் மூலம் விவசாயத்திற்கு தேவையான பெருமளவிலான நீர்வளத்தைப் பாதுகாக்க மூடியும்’ என அவர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg