Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுவீடனுக்கு வடகொரிய வெளிவிவகார அமைச்சர் விஜயம்

In ஐரோப்பா
Updated: 06:19 GMT, Mar 16, 2018 | Published: 06:19 GMT, Mar 16, 2018 |
0 Comments
1082
This post was written by : Suganthini

சுவீடனுக்கும் வடகொரியாவுக்குமிடையில் இருதரப்பு உறவு மற்றும் பரஸ்பர நம்பிக்கையை வலுபடுத்துதல் தொடர்பாக, வடகொரியாவின் வெளிவிவகார அமைச்சர் றி யொங் ஹோ (Ri Yong Ho) கவனஞ்செலுத்தியுள்ளார்.

2 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு சுவீடன் சென்ற வடகொரிய வெளிவிவகார அமைச்சர், சுவீடன் வெளிவிவகார அமைச்சர் மார்கொட் வோல்ஸ்ரொம்மை (Margot Wallstrom) நேற்று (வியாழக்கிழமை) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இதன்போது, மேற்படி விடயங்கள் தொடர்பாக இரு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களும் கவனஞ்செலுத்தியுள்ளனர்.

இதேவேளை, கொரியதீபகற்பம் மீதான பாதுகாப்பு நிலைவரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாகக் கவனஞ்செலுத்தப்பட்டதாக, சுவீடன் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னுக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்குமிடையில் சந்திப்பொன்று நடைபெறவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் நிலையில், வடகொரிய வெளிவிவகார அமைச்சரின் சுவீடன் விஜயம் அமைந்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg