Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானியாவை மீண்டும் மிரட்டும் கடும்குளிர் : வானிலை எச்சரிக்கை

In
Updated: 11:47 GMT, Mar 16, 2018 | Published: 11:31 GMT, Mar 16, 2018 |
0 Comments
1453
This post was written by : S.K.Guna

பிரித்தானியாவில் மீண்டும் கடும்குளிருடன்கூடிய பனிப்பொழிவு சனி, ஞாயிறு தினங்களில் ஏற்படும் என வானிலைநிலையம் மஞ்சள் எச்சரிக்கையினை விடுத்துள்ளது.

சைபீரியாவில் இருந்து கிளர்ந்தெழும் கடுமையான குளிர்காற்று பிரித்தானியா நோக்கி மேலெழுந்து வருவதனாலேயே இந்த கடுமையான குளிர் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனை Beast from the East 2.0 என்று ஆங்கில ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்த குளிர்காற்றுக்கு காரணமாக பிரித்தானிய முழுவதும் -2C உறைநிலை வானிலை ஏற்படுவதுடன் இன்று வெள்ளிக்கிழமை மாலையில் இருந்து சனி, ஞாயிறு வரை மழையுடன் கூடிய பனிப்பொழிவு லண்டன், மற்றும் இங்கிலாந்தின் தென்கிழக்கு, மிட்லாண்ட், ஸ்கொட்லாந்துப் பிராந்தியங்களில் இருக்கும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அத்துடன் இப்பகுதிகளில் பனிப்பொழிவு 5cm முதல் 20cm வரையில் ஏற்படக்கூடும் எனவும் உறைநிலை வானிலையால்  போக்குவரத்துக்கள்  பாதிக்கப்படலாம் என்றும் முன்னறிவிப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

இம்மாதத்தின் ஆரம்பத்தில் நிலவிய கடுமையான குளிர் மற்றும் பனிப்பொழிவினால் மக்கள் பெரும் சிரமங்களுக்குளாகியிருந்தனர்  என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg