Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நியூயோர்க் மீள்சுழற்சி நிலையத்தில் தீ: ரயில் சேவை பாதிப்பு

In
Updated: 03:15 GMT, Mar 17, 2018 | Published: 03:15 GMT, Mar 17, 2018 |
0 Comments
1126
This post was written by : Suganthini

அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலுள்ள மீள்சுழற்சி நிலையத்தில் தீ பரவியதைத் தொடர்ந்து, அந்நகரில் மறு அறிவித்தல்வரை ரயில் போக்குவரத்துச் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

மேற்படி மீள்சுழற்சி நிலையத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) திடீரென்று தீ பரவியுள்ளது. இந்நிலையில் போர்ட் ஜெபர்ஸன் (Port Jefferson), ரொங்கொன்கொமா (Ronkonkoma), ஓஸ்டர் பே (Oyster Bay), ஹெம்ஸ்டெட் (Hempstead) ஆகிய பகுதிகளுக்கான ரயில் போக்குவரத்துச் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, பெருநகர போக்குவரத்து அதிகாரசபை கூறியுள்ளது.

இந்தத் தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவில்லையெனத் தெரிவித்துள்ள அதிகாரிகள், இது தொடர்பாகப் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg