Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கோரிக்கை நிராகரிப்பு!

In இலங்கை
Updated: 04:16 GMT, Mar 17, 2018 | Published: 03:27 GMT, Mar 17, 2018 |
0 Comments
1079
This post was written by : Varatharajan Yuganthini

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை கைவிடுமாறு, பல்கலைக்கழக மானியங்கள்  ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை  பல்கலைக்கழக  ஒன்றிணைந்த தொழிற்சங்கம் நிராகரித்துள்ளது.

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள்  தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) 18ஆவது நாளாகவும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பணிப்புறக்கணிப்பை கைவிட்டு, பணிக்கு செல்லுமாறு பல்கலைக்கழக மானியங்கள்  ஆணைக்குழு அறிவித்த போதிலும், அதை மீறி தொடர்ந்தும்  கல்விசாரா ஊழியர்கள்  ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில், தாம் ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக தொிவித்த பல்கலைக்கழக ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் இணைத் தலைவர் டபிள்யு மல்வத்தகே, எனினும் இதற்கு முன்னர் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் போதும் தமக்கு சாதகமான முடிவு ஏதும் கிட்டவில்லை எனக் குறிப்பிட்டார்.

கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பினால்  பல்கலைக்கழக கல்விசார் நடவடிக்கைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg