Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சர்ச்சையால் ரத்தான கூட்டம்- மீண்டும் விவாதத்திற்கு வருகிறது இலங்கை விவகாரம்

In இலங்கை
Updated: 03:48 GMT, Mar 17, 2018 | Published: 03:48 GMT, Mar 17, 2018 |
0 Comments
1230
This post was written by : Surenth

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான பூகோள காலக்கிரம அறிக்கை நாளை மறுதினம் (திங்கட்கிழமை) விவாதத்திற்கு வரவுள்ளது.

நேற்று நடைபெறவிருந்த குறித்த விவாதம் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், திங்கட்கிழமை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தொிவிக்கப்படுகிறது.

ஜெனிவா மனித உரிமைகள் பேரவை அலுவலகத்தின் பணியாளர்கள் நேற்றைய தினம் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததால் வெள்ளிக்கிழமைக்கான முக்கிய அமர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

விவாதத்தை தொடர்ந்து இலங்கை தொடர்பான பூகோள காலக்கிரம அறிக்கை நிறைவேற்றப்படும் என இலங்கை அரச தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இதேவேளை, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகரின் இலங்கை தொடர்பான அறிக்கை எதிர்வரும் 21ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg