Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இங்கிலாந்து அணிக்கு பின்னடைவு: நியூசிலாந்து தொடரிலிருந்து முக்கிய வீரர் விலகல்

In கிாிக்கட்
Updated: 06:32 GMT, Mar 17, 2018 | Published: 05:14 GMT, Mar 17, 2018 |
0 Comments
1178
This post was written by : Anojkiyan

நியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து, இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் மேசன் கிரேன் விலகியுள்ளார்.

இத்தொடருக்கு முன்னதாக நடைபெற்ற பயிற்சி போட்டியில் விளையாடிய மேசன் கிரேனுக்கு, முதுகுப் பகுதியில் முறிவு ஏற்பட்டுள்ளதனால் அவர் மருத்துவ சிகிச்சைக்காக இங்கிலாந்து பயணிக்கவுள்ளார். இதனால் அவர் இத்தொடரில் இடம்பெறமாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அவரது இழப்பு அணிக்கு பாரிய இழப்பு என தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு அவருக்குப் பதிலாக இடது கை ஸ்பின்னரான ஜேக் லீச் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பகல்-இரவு போட்டியாக எதிர்வரும் 22ஆம் திகதி ஆக்லாந்தில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg