Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுனில் நரைன் இனி பந்துவீசுவாரா?

In கிாிக்கட்
Updated: 06:45 GMT, Mar 17, 2018 | Published: 05:31 GMT, Mar 17, 2018 |
0 Comments
1150
This post was written by : Anojkiyan

மீண்டும் பந்துவீச்சு சர்ச்சையில் சிக்கியுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன், இனிவரும் தொடர்களில் பந்து வீசுவாரா என்ற தீர்மானத்தை அணியே தீர்மானிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது பந்துவீச்சில் மீண்டும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

சார்ஜாவில் நடைபெற்றுவரும் பாகிஸ்தான் சுப்பர் லீக் ரி-ருவென்ரி தொடரில் லாகூர் குவாலண்டர்ஸ் அணிக்காக விளையாடி வரும் சுனில் நரைன், லாகூர் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கெதிரான போட்டியில், ஐ.சி.சி.யின் பந்துவீச்சு முறைமைக்கு எதிராக பந்து வீசியதாக நடுவர்களால் முறையிடப்பட்டது.

இதையடுத்து, அவரது பந்துவீச்சு தொடர்பாக, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, மேற்கிந்திய தீவுகள் சபையிடம் அறிக்கையொன்றை கையளித்துள்ளது.

ஆனால், இதுவொரு எச்சரிக்கை என்ற அடிப்படையில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளதால் அவர் தொடர்ந்து பந்துவீசி வருகிறார். ஆனால் இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் சபை மீண்டும் ஆராய தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது. இதனால் அவர் எதிர்வரும் தொடர்களிலும், இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல் தொடரிலும் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஏற்கனவே கடந்த 2014ஆம் ஆண்டு பந்துவீச்சு முறைமையில் சிக்கிய நரைன், தனது பந்துவீச்சை சரிசெய்து கொண்டு மீண்டும் 2015ஆம் ஆண்டு அணிக்கு திரும்பினார். அதன்பின்னர் கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கைக்கு எதிரான போட்டியின்போது புகார் கூறப்பட்டது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg