Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொரியதீபகற்ப தீர்வுக்கு சுவீடன் உதவத் தயார்

In ஐரோப்பா
Updated: 05:36 GMT, Mar 17, 2018 | Published: 05:36 GMT, Mar 17, 2018 |
0 Comments
1083
This post was written by : Suganthini

கொரியதீபகற்ப பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில், சுவீடன் உதவியளிக்கத் தயாராகவுள்ளதாக, சுவீடன் பிரதமர் ஸ்டீஃபன் லொவென் (Stefan Lofven) தெரிவித்துள்ளார்.

பேர்லினில் ஜேர்மன் அதிபர் அங்கேலா மெர்கலை நேற்று (வெள்ளிக்கிழமை) சந்தித்த பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னுக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்குமிடையிலான சந்திப்பு, எதிர்வரும் மே மாதம் நடைபெறுமென்று எதிர்பார்க்கப்படும் நிலையில், சுவீடனுக்கு வடகொரிய வெளிவிவகார அமைச்சர் றி யொங் ஹோ  (Ri Yong Ho) கடந்த வாரம் விஜயம் செய்திருந்தார்.

இந்நிலையில், சுவீடன் வெளிவிவகார அமைச்சர் மார்கொட் வோல்ஸ்ரொம்மை (Margot Wallstrom),  வடகொரிய வெளிவிவகார அமைச்சர் சந்தித்துக் கலந்துரையாடியபோது, கொரியதீபகற்பப் பிரச்சினை தொடர்பாகவும் கவனஞ்செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg