Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சம்பியன் பட்டம் வெல்லப்போவது யார்? சென்னை- பெங்களூர் அணிகள் மோதல்

In உதைப்பந்தாட்டம்
Updated: 07:21 GMT, Mar 17, 2018 | Published: 05:46 GMT, Mar 17, 2018 |
0 Comments
1132
This post was written by : Anojkiyan

பெங்களூரில்  இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ள நான்காவது இந்தியன் சுப்பர் லீக் கால்பந்து போட்டி தொடரின் இறுதிபோட்டியில் பெங்களூர் எப்.சி. அணியும், சென்னையின் எப்.சி. அணியும் மோதவுள்ளன.

கடந்த 2015ஆம் ஆண்டு  முதல் சம்பியன் பட்டத்தை வென்ற சென்னை அணி, தற்போது இரண்டாவது முறையாக மகுடம் சூடும் முனைப்பில் உள்ள அதேவேளை, பெங்களூர் எப்.சி. அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இத்தொடரில் சம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு இந்திய மதிப்பில் 8 கோடி ரூபாயும், இரண்டாவது இடம் பெறும் அணிக்கு 4 கோடி ரூபாயும் பரிசுத்தொகையாக வழங்கப்படவுள்ளது.

இத்தொடரின் அரையிறுதி முதல் சுற்று போட்டியில் பெங்களூர் – புனே அணிகள் மோதின. இப்போட்டி கோல் ஏதுமின்றி சமநிலையில் நிறைவடைந்தது. மற்றொரு அரையிறுதி போட்டியில் சென்னையின் எப்.சி.- கோவா மோதிய போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

இதைதொடர்ந்து நடைபெற்ற அரையிறுதி 2வது சுற்று போட்டியில் பெங்களூர் 3-1 என்ற கோல் கணக்கில் புனேவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதி 2வது சுற்று போட்டியில் சென்னையின் எப்.சி. 3-0 என்ற கோல் கணக்கில் கோவாவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg