ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்: சரத் பொன்சேகா!
This post was written by : Surenth

நாட்டில் ஏற்பட்டுள்ள தேவை மற்றும் மக்களின் அழைப்பின் அடிப்படையில் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக மாகாண அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கு அமைச்சு வழங்கப்படாமை குறித்து சிங்கள ஊடகம் ஒன்று கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தான் எந்த ஒரு சவாலையும் எதிர்கொள்ளத் தயங்கப்போவதில்லை எனவும் அதற்காக தான் வெட்கப்பட போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சுப்பதவியை வழங்க பரிந்துரை செய்தும் ஜனாதிபதி அதனை ஏற்கவில்லை எனவும் சரத் பொன்சேகா குற்றம்சுமத்தினார்.