Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை- ரோஹிங்கியா அகதிகளை ஒன்றாக கருத முடியாது: மத்திய அரசு

In இந்தியா
Updated: 10:17 GMT, Mar 17, 2018 | Published: 10:17 GMT, Mar 17, 2018 |
0 Comments
1126
This post was written by : Kemasiya

இலங்கைத் தமிழ் அகதிகளையும், ரோஹிங்கியா முஸ்லிம்களையும் ஒன்றாக கருத முடியாது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான வழக்கை நேற்று (வெள்ளிக்கிழமை) நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்த போதே மத்திய அரசு மேற்படி தெரிவித்துள்ளது.

மியான்மர் இராணுவம் மற்றும் சில பௌத்த மத குழுக்கள் அங்குள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது 2017 ஆம் ஆண்டு தாக்குதல் நடத்தியது.
இதையடுத்து, இந்தியாவுக்கு ஆயிரக்கணக்கில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் குடிபெயர்ந்த வண்ணமுள்ளனர்.

இந்த நிலையில், இந்தியாவுக்கு அகதிகளாக வருகை தரும் இலங்கை தமிழர்களுக்கு மத்திய அரசு வழங்கும் நிவாரண உதவிகளை தங்களுக்கும் வழங்க வேண்டும் என கோரி ரோஹிங்கியா முஸ்லிம்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில், மத்திய அரசு நேற்று தனது பதில் மனு தாக்கல் செய்தது.

குறித்த பதில் மனுவில் இலங்கைத் தமிழ் அகதிகளையும், ரோஹிங்கியா முஸ்லிம்களையும் ஒன்றாக கருத முடியாது என இந்திய மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

அவ்வாறு கருதினால் இந்த விவகாரத்தை தவறாக புரிந்து கொள்வது போன்றதாகும் எனவும் மத்திய அரசு தௌ;வாக குறிப்பிட்டுள்ளது.

இந்தியா – இலங்கை நாடுகளிடையே 1964 மற்றும் 1979-ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட இரு ஒப்பந்தங்களின் அடிப்படையிலேயே இந்திய அரசு இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நிவாரண உதவிகளை செய்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், இந்திய எல்லையில் மிளகாய் எறிகுண்டுகளை பாதுகாப்பு படையினர் உபயோகப்படுத்துவதாக கூறும் ரோஹிங்கியா முஸ்லிம்களின் குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்துள்ளது.

சவாலான சூழ்நிலைகளில் எல்லை பாதுகாப்புப் படையினர் தமது கடமைகளை நிறைவேற்றி வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், வெளிநாட்டவர்கள் இந்திய எல்லைக்குள் நுழைவதை உறுதிப்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது எனவும், இந்தியாவுக்குள் வெளிநாட்டவர்கள் நுழைய கடவுச்சீட்டு வேண்டும் எனவும், மத்திய அரசு தன்னுடைய பதில் மனுவில் தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg