Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மன்னாரில் இடம்பெற்ற மகளிர் தின ஊர்வலம்!

In
Updated: 10:04 GMT, Mar 17, 2018 | Published: 10:04 GMT, Mar 17, 2018 |
0 Comments
1098
This post was written by : Litharsan

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மன்னார் மாவட்ட மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று (சனிக்கிழமை) காலை சர்வதேச பெண்கள் தின விழிர்ப்புணர்வு ஊர்வலம் இடம் பெற்றது.

மன்னார் மாவட்ட வளர்பிறை பெண்கள் திட்டப் பொறுப்பதிகாரி ரி.மேரி பிரியங்கா தலைமையில் ஆரம்பமானது.

மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன் ஆரம்பமான குறித்த ஊர்வலம் பிரதான வீதியூடாக சென்று மன்னார் பனங்கட்டுக்கொட்டு சிகையலங்கரிப்பாளர் கூட்டுறவுச்சங்க மண்டபத்தைச் சென்றடைந்தது.

மன்னார் மாவட்டத்தில் பெண்கள் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு பெண்கள் குறித்த ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

ஊர்வலத்தைத் தொடர்ந்து மன்னார் பனங்கட்டுக்கொட்டு சிகையலங்கரிப்பாளர் கூட்டுறவுச்சங்க மண்டபத்தில் நிகழ்வுக்ள இடம்பெற்றதன.

குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக மன்னார் நகர உதவிப் பிரதேச செயலாளர் திருமதி. கனகாம்பிகை சிவசம்பு , தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் பெண்கள் திட்ட இணைப்பாளர் திருமதி.லவினா, வடக்கு கிழக்கு மாகாண இணைப்பாளர் அன்டனி ஜேசுதாசன், மன்னார் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் இணைப்பாளர் பெனடிற் குரூஸ் மற்றும் மாதர் கிராம அமைப்புக்கள் , பெண்கள் அமைப்புக்களின் பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg