Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எமது தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை: கிளிநொச்சியில் மீள்குடியேறியோர் விசனம்

In இலங்கை
Updated: 10:16 GMT, Mar 17, 2018 | Published: 10:16 GMT, Mar 17, 2018 |
0 Comments
1306
This post was written by : Varatharajan Yuganthini

யுத்தம் காரணமாக இந்தியாவிற்கு அகதிகளாக இடம்பெயர்ந்து சென்ற நிலையில் தற்போது நாடு திரும்பியுள்ள தமக்கு வீட்டுத்திட்டம் உள்ளிட்ட  எவ்வித அடிப்படை தேவைகளும் பூர்த்திசெய்யப்படவில்லை என கிளிநொச்சியில் மீள குடியேறியுள்ள பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

தமது பூர்வீக மண்ணைவிட்டு கடந்த 1996ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து இந்தியாவிற்கு அகதிகளாக சென்ற குறித்த குடும்பங்கள் கடந்த 2016ம் ஆண்டு இறுதி பகுதியில் நாடு திரும்பியிருந்தனர்.

இந்நிலையில், எம்மை நாடு திரும்புமாறு அழைத்த அரசு, தமக்குரிய தேவைகளை பூர்த்தி செய்து தரவில்லை என அம்மக்கள் குறிப்பிட்டுள்ளனர். மீள்குடியேறிய தமக்கு வீட்டுத்திட்டம் ஏதும் வழங்கப்படவில்லை. தற்காலிக கொட்டகையும் கூட அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றாலேயே வழங்கப்பட்டதாகும் தெரிவித்தனர்.

தமக்கு கோழிக்கூடு ஒன்றுஅமைத்து கொடுக்கப்பட்டு கோழி குஞ்சுகள் மாத்திரமே வழங்கப்பட்டதே தவிர  வேறு எந்ததொரு உதவிகளும் கிடைக்கவில்லையென மக்கள் தெரிவித்தனர்.

அத்துடன் தம்மை நாட்டுக்கு திருப்பி அனுப்பியபோது அங்கு வேலைவாய்ப்புக்கள் உட்பட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்நிலையில் தமக்கு தேவையான நீர், மலசலகூடம் மற்றும் வீட்டு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவதோடு, பிள்ளைகளின் கல்விக்காக பிறப்பு சான்றிதள் உள்ளிட்ட அனைத்த தேவைகளையும் உடன் பூர்த்தி செய்து தருமாறும் மக்கள் கோருகின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg