Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாடசாலையில் வழங்கப்பட்ட உணவு விசமடைந்தது: மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

In இந்தியா
Updated: 10:27 GMT, Mar 17, 2018 | Published: 10:27 GMT, Mar 17, 2018 |
0 Comments
1123
This post was written by : Kemasiya

உத்தரபிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு விசமடைந்ததால் 40 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உத்தரபிரதேசம், எடா மாவட்டத்தில் உள்ள கஸ்துர்பா காந்தி எனும் பாடசாலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மதியம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட 40க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சிறிது நேரத்திலேயே வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் சிலர் தற்போது வைத்திய சாலையில் இருந்து வெளியேறியுள்ளதாகவும், பலர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட நீதிபதி அமித் கிஷோர் உடனடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg