Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இயற்கையை விஞ்சும் விஞ்ஞானம்!

In
Updated: 10:36 GMT, Mar 17, 2018 | Published: 10:36 GMT, Mar 17, 2018 |
0 Comments
1062
This post was written by : Puvanes

இயற்கையை மனிதனால் படைக்க முடியாது. அதாவது இயற்கை என்பது மனிதனுக்கு அப்பாற்பட்டது. ஒரு வகையில் மனித அறிவுக்கு சாத்தியப்படாத சிறப்பானதோர் வடிவமைப்பு இயற்கை என்பதனை மறுக்க முடியாது.

ஆனாலும் அறிவியலால் இயற்றையின் படைப்புகளை மனிதன் செயற்கையாக உருவாக்க முயற்சி செய்து கொண்டே வருகின்றார். உதாரணமாக செயற்கை மழை, கடல் அலை போன்றவற்றை மனிதன் விஞ்ஞானத்தினால் உதவியோடு உருவாக்கி வெற்றி பெற்று விட்டான்.

சரி இவை இருக்கட்டும் இயற்கை கொடுத்த வரம் சிலந்திக்கு அதன் வலை. இதனையே விஞ்ஞானம் செயற்கையாக உருவாக்க முடியும் என நிரூபித்துள்ளது.

செயற்கையாக உருவாக்கப்படும் சிலந்தி வலை நூல்களின் மூலம் தற்போது ஆடை மற்றும், காலணிகள் போன்றவை உருவாக்கப்பட்டு வருகின்றன.

synthetic spider silk எனப்படும் இந்த புதிய கண்டுபிடிப்பு மரபணுக்கள் மாற்றப்பட்ட E.coli எனப்படும் பக்றீரியாக்கள் மூலமாக உருவாக்கப்படுகின்றது.

சிலந்தி வலையானது மிகவும் வலிமை மிகுந்த ஒன்றாகும். நுண்ணிய அளவே இருந்த போதும் அதிக நிறையைத் தாங்கும் ஆற்றல் சிலந்தி வலைகளுக்கு உண்டு.

அதே வகை நுட்பத்தினை பயன்படுத்தி மனிதர்கள் அன்றாடம் பாவிக்கும் பொருற்களை உற்பத்தி செய்யும் போது அதன் பாவனைத்தன்மை, ஆற்றல் என்பன மிக அதிகமாகவிருக்கும்.

இதன் காரணமாகவே செயற்கை சிலந்தி வலையினை ஆய்வாளர்கள் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது மட்டுமல்லாமல் அதன் மூலம் உற்பத்தி பொருட்களையும் செய்து வருகின்றனர்.

ஆங்கிலத் திரைப்படங்களைப் பார்த்து விந்தையாக கூறப்பட்ட செயற்கை சிலந்தி வலை தற்போது நிஜத்தில் உருவாக்கப்பட்டு விட்டமை தொழில்நுட்ப உலகின் வளர்ச்சியையே எடுத்துக் காட்டுவதாகவே அமைகின்றமை இப்போது சிலந்தி வலையை கண்டு பிடித்த விஞ்ஞானம் எதிர்காலத்தில் பல மாற்றங்களை உருவாக்கும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg