Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மக்களுக்கு விமோசனத்தைப் பெற்றுக்கொடுக்க உழைக்க வேண்டும் – டக்ளஸ் எடுத்துரைப்பு

In இலங்கை
Updated: 13:28 GMT, Mar 17, 2018 | Published: 13:23 GMT, Mar 17, 2018 |
0 Comments
1145
This post was written by : Litharsan

மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு அமைவாக மக்களுக்கு விமோசனத்தைப் பெற்றுக்கொடுக்க தொடர்ந்தும் உறுதியுடன் உழைக்கவேண்டும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்களில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட 98 உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “நடைபெற்று முடிந்த தேர்தல் வெற்றியானது ஈ.பி.டி.பி கட்சியை அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.  நாம் எதிர்பார்த்த வெற்றி எமக்குக் கிடைக்காவிட்டாலும், வடக்குக் கிழக்கில் 98 உறுப்பினர்களை நேரடியாகவும், விகிதாசார பட்டியல் ஊடாகவும் வென்றெடுத்துள்ளோம். அத்துடன் எமக்கான வாக்குகளும் அதிகரித்துள்ளன.

குறிப்பிடத்தக்க இந்த வெற்றிக்காக உழைத்த தோழர்கள், வேட்பாளர்கள், கட்சியின் அபிமானிகள் அனைவருக்கும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அத்துடன் கட்சியின் வெற்றிக்காவும், வளர்ச்சிக்காகவும் நீங்கள் அனைவரும் அர்ப்பணிப்போடும், ஒற்றுமையோடும் செயற்படவேண்டும். நாம்பெற்றுக்கொண்ட வெற்றியும், நமது உழைப்பும் எமது மக்களுக்கு பலாபலன்களையும் விமோசனத்தையும் பெற்றுக்கொடுப்பதாக அமைய நாம் உறுதியுடன் செயற்பட வேண்டும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg