Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாம்பன் பாலத்தை கடந்து சென்ற சரக்கு கப்பல்

In இந்தியா
Updated: 13:55 GMT, Mar 17, 2018 | Published: 13:55 GMT, Mar 17, 2018 |
0 Comments
1505
This post was written by : Velauthapillai Kapilan

பாம்பன் ரயில் வே தூக்கு பாலத்தை கடந்து சென்ற சரக்கு கப்பலை, அப்பகுதிக்கு வந்த சுற்றுலா பயணிகள் கண்டு கழித்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று (வெள்ளிக்கிழமை) குறித்த பாலத்தை சரக்கு கப்பல் கடந்து சென்றது. இதனை நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்.

பாம்பன் ரயில் பாலமானது மன்னார் வளைகுடா மற்றும் பாக்கு நீரிணைப்பு கடற்பகுதிகளில் இந்தியாவை ராமேஸ்வரம் தீவோடு இணைக்கிறது. இது இந்தியாவில் கட்டப்பட்ட முதல் கடல் பாலம் என்பதுடன் 2.3 கி.மீ. நீளம் கொண்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

வடபகுதியில் பாக்ஜலசந்தி கடற் பகுதியிலிருந்து, தெற்கே மன்னார் வளைகுடா செல்லும் கப்பல்களும், விசைப்படகுகளும் இந்த தூக்குப் பாலத்தைக் கடந்து தான் செல்ல வேண்டும்.

கோவா துறைமுகத்தில் இருந்து கொல்கத்தா செல்வதற்காக தனியாருக்குச் சொந்தமான 210 அடி நீளமும் 45 அடி அகலமும் கொண்ட பெரிய சரக்கு கப்பல் பாம்பன் பாலத்தை கடந்து செல்வதற்காக கடந்த 14 ஆம் திகதி மன்னார் வளைகுடா கடற்பகுதியில் நங்கூரமிடப்பட்டது.

இந்நிலையில் நேற்று பாம்பன் துறைமுக அதிகாரிகளால் ஆவணங்கள் சரி பார்த்த பின் பாம்பன் ரயில் தூக்குப்பாலம் திறக்கப்பட்டதும் மன்னார் வளைகுடாவிலிருந்து பாக் ஜலசந்தி கடற்பகுதிக்கு செல்ல காத்திருந்த சரக்கு கப்பல் பாம்பன் தூக்கு பாலம் வழியாக கடந்து சென்றுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg