Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மன்னாரில் ஆங்கில டிப்ளோமா கற்கை நெறி ஆரம்பம்

In இலங்கை
Updated: 14:38 GMT, Mar 17, 2018 | Published: 14:38 GMT, Mar 17, 2018 |
0 Comments
1047
This post was written by : Velauthapillai Kapilan

கொழும்பில் ‘அக்குவாயினஸ்’ உயர் கல்வி நிறுவனத்தின் அனுசரணையுடன் மன்னாரில் ஆங்கில டிப்ளோமா கற்கை நெறி வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் தாழ்வுபாடு பிரதான வீதியில் உள்ள ஞானோதய மண்டபத்தில் அருட்தந்தை யூட் கறோல் தலைமையில் இக்கல்விச்செயற்பாடுகள்  இன்று (சனிக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டன.

இந்நிகழ்வில்  பிரதம விருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை கலந்து கொண்டதுடன் மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி. சுகந்தி செபஸ்தியன் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதன் போது குறித்த ஆங்கில டிப்ளோமா கற்கை நெறியில் கலந்து கொள்ளும் மாணவர்களின் விசேட நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg