Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கோலாகலமாக நடைபெற்ற காமன் கூத்து!

In ஆன்மீகம்
Updated: 14:16 GMT, Mar 17, 2018 | Published: 14:16 GMT, Mar 17, 2018 |
0 Comments
1163
This post was written by : Litharsan

தெனியாய சின்னத்தோட்டத்தில் காமன் கூத்து கோலாகலமாக நடைபெற்றதுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் வருகை தந்திருந்தனர்.

நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணியளவில் ஆரம்பமாகிய இவ்விழா இன்று (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு நிறைவுபெற்றது.

காமன் கூத்தானது இரவு ஏழு மணி தொடக்கம் விடியும் வரை ஆடப்படுவதாகும். மலையகத்தில் காணப்படும் காமன் கூத்து கதையின் படி சிவன் அக்கணது தவத்தை அழித்த பின்னர் பெருங்கோபத்தோடு இமயமலையில் தவமிருந்தபோது தேவலோகம் அவதியுற்றிருந்தது.

இந்நேரத்தில் தேவர்கள் என்ன செய்வது என்று தவிக்கையில் இந்திரன் சிவனுடைய தவத்தைக் கலைக்கும்படி மன்மதனுக்கு தூதோலை ஒன்றை அனுப்பினார். இந்திரனின் கட்டளையினை ஏற்று மன்மதனும் சிவனின் தவத்தைக் கலைத்ததால் சிவனின் சினத்தினால் மன்மதன் மடிந்தார்.

அதன்பின்னர் சிவனின் மகளான ரதி தந்தை சிவனிடம் இறைஞ்சி என்னுடைய கணவனின் செயலுக்கு வருந்தி கணவனை உயிர்ப்பிக்குமாறு பணிந்தபோது மூன்றாவது நாள் சிவன் மன்மதனுக்கு உயிர் கொடுத்ததாக ஐதீகம் கூறுகின்றது. அதன்பின்னர் மன்மதன் தனது தவறை எண்ணி சிவனிடம் மன்னிப்புக் கேட்பதாக கதை அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg