Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போதைப் பொருள் கடத்தலை தடுக்க கடற்படைக்கு உலங்குவானூர்தி

In இலங்கை
Updated: 15:39 GMT, Mar 17, 2018 | Published: 15:39 GMT, Mar 17, 2018 |
0 Comments
1098
This post was written by : Velauthapillai Kapilan

போதைப் பொருள் கடத்தலை தடுக்கும் வகையில் இலங்கை கடற்படையினர் உலங்குவானூர்தி மூலம் தேடும் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்தியாவில் இருந்து படகுகள் மூலம் இலங்கைக் கடல் எல்லைக்குள் போதைப் பொருள் கடத்தலை தடுக்கும் வகையில் இத்திட்டத்தின் மூலம்  விசேட கவனம் செலுத்தப்பட உள்ளது.

இத்தேடுதல் செயற்பாட்டின் மூலம் கடல் வழியாக இலங்கைக்குள் கடத்தப்படும் போதைப் பொருள் உட்பட, குற்றச் செயல்களை கட்டுப்படுவது   இலகுவானது என கடற்படையின் பதில் ஊடகப் பேச்சாளர் கே.கே.சீ.உதயங்க தெரிவித்துள்ளார்.

மேலும் இத்தேடுதல் நடவடிக்கைகளுக்கு தயார்ப்படுத்தும் வகையில் கடற்படை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு விசேட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதுடன் மெரின் படைப் பிரிவையும் இதற்காக பயன்படுத்த உள்ளதாகவும்  இனிவரும் காலங்களில் ஆளில்லா விமானம் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர்  தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg