Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வவுனியாவில் பௌத்த விகாரை – அரசியல்வாதிகள் மௌனம்

In இலங்கை
Updated: 16:31 GMT, Mar 17, 2018 | Published: 16:31 GMT, Mar 17, 2018 |
0 Comments
1174
This post was written by : Velauthapillai Kapilan

மத வழிபாட்டுத் தலங்கள் என்ற போர்வையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் பௌத்த விஹாரை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்விடயம் தொடர்பாக கடந்த சில மாதங்களாக ஊடகங்கள் வாயிலாக வெளிக்கொண்டுவரப்பட்ட போதிலும் தற்போது இப்பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக  மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனை தடுத்து நிறுத்துமாறு கோரி பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்த போதிலும், இவ்விடயம் தொடர்பாக வன்னி  நாடாளுமன்ற உறுப்பினர்களும் மற்றும் வவுனியா மாவட்ட மாகாணசபை உறுப்பினர்களும் மௌனம் காத்து வருகின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினரான சிவமோகன் மற்றும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் ஆகியோர் இவ்விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்த போதிலும், இதுதொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையென பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg