Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரபாடாவிற்கான தடை – முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நிதினி கருத்து

In கிாிக்கட்
Updated: 06:51 GMT, Mar 18, 2018 | Published: 06:21 GMT, Mar 18, 2018 |
0 Comments
1355
This post was written by : Velauthapillai Kapilan

தென்ஆப்பிரிக்கா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றுவரும் நிலையில் ரபாடா ‘கேப்டவுன் டெஸ்டில்’ இடம்பெறாவிட்டால் தென்ஆப்பிரிக்கா 5 வேகப்பந்து வீச்சாளர்களை இழப்பதற்கு சமமானது என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நிதினி தெரிவித்துள்ளார்.

இடம்பெற்றுவரும் டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில் 2 வது போட்டியின்போது தென்ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா அவுஸ்ரேலிய அணித்தலைவர் ஸ்மித்துடன் மோதலில் ஈடுபட்டார். இதனால் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட ரபாடாக்கு தடைவிதிக்கப்பட்டது.

இந்த தடையை எதிர்த்து ரபாடா மேல் முறையீடு செய்துள்ள நிலையில் இதன்மீதான விசாரணை நாளை (திங்கட்கிழமை) ஆரம்பமாகலாம் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் விசாரணையின் போது அவரது தண்டனை குறைக்கப்பட்டால் ”கேப்டவுன் டெஸ்டில்’ விளையாட வாய்ப்பு கிடைக்கு எனவும் இல்லையேல் ஐந்து வேகப்பந்து வீச்சாளர்களை இழந்ததுபோலாகிவிடும் என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நிதினி கூறியுள்ளார்.

ரபாடா தடைகுறித்து நிதினி கூறுகையில் ”ரபாடா எங்கள் மண்ணின் மைந்தன். நாங்கள் அவரை அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டியில் இழந்தால், அது அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும். அவரை இழப்பது ஐந்து பந்து வீச்சாளர்களை இழந்ததற்கு சமம். போர்ட் எலிசபெத்தில் 11 விக்கெட்டுக்கள் சாய்த்து்ளளார். இது பெரிய இடைவெளியாக இருக்கும். இதை ஐந்து பந்து வீச்சாளர்களை கொண்டுதான் நிரப்ப முடியும். அவர் அணியில் இல்லாவிட்டால், ஒட்டுமொத்த கப்பலும் நீரில் மூழ்கி கொண்டிருப்பது போன்றது. யாராலும் அந்த கப்பல் கவிழ்வதை தடுத்து மீண்டும் பயணம் செய்ய வைக்க இயலாது. வேகப்பந்து வீச்சின் தலைவர் அவர்” என அவர்  கருத்து தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg