Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒற்றைச்சந்தை: ஸ்கொட்லாந்தின் சுகாதார, சமூக பராமரிப்புச் சேவைகளுக்கு ஆபத்து

In
Updated: 08:24 GMT, Mar 18, 2018 | Published: 08:21 GMT, Mar 18, 2018 |
0 Comments
1166
This post was written by : Suganthini

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றைச் சந்தையிலிருந்து பிரித்தானியா வெளியேறினால், ஸ்கொட்லாந்தின் சுகாதார மற்றும் சமூக பராமரிப்புச் சேவைகள் பாரிய ஆபத்தை எதிர்நோக்குமென, எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஸ்கொட்லாந்து சுகாதாரச் செயலாளர் சோனா ரொபிஸன் (Shona Robison) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக, சர்வதேச ஊடகமொன்று நேற்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘எமது சுகாதார மற்றும் சமூக சேவைகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பாரிய பங்களிப்பை வழங்கிவருகின்றனர்.

சுகாதார மற்றும் சமூக சேவைகளுக்கான வெற்றிடங்கள் அவர்கள் மூலமாக நிரப்பப்படுவதுடன், மிகவும் கடினமாகவும் அவர்கள் உழைக்கின்றனர். இவ்வாறான நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றைச் சந்தையிலிருந்து பிரித்தானியா வெளியேறினால், ஸ்கொட்லாந்தின் சுகாதார மற்றும் சமூக பராமரிப்புச் சேவைகள் பாரிய ஆபத்துக்கு முகங்கொடுக்கக்கூடிய நிலைமை காணப்படுகின்றது’ என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg