Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

களனி கங்கை மாசடைவதைத் தடுக்கும் வேலைத்திட்டம் முன்னெடுப்பு

In இலங்கை
Updated: 10:51 GMT, Mar 18, 2018 | Published: 09:09 GMT, Mar 18, 2018 |
0 Comments
1062
This post was written by : Litharsan

மஸ்கெலியா, மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தில் குப்பைகள் தேங்கியுள்ள நிலையில் சூழல் மாசடைவதைத் தடுப்பதற்கும் களனி கங்கையின் சுத்தத்தைப் பேணுவதற்கும் குப்பைகளை அகற்றும் வேலைத்திட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

இவ் வேலைத்திட்டத்தினை மஸ்கெலியா பொலிஸார் மற்றும் மஸ்கெலியா சிவில் அமைப்பினர் ஆகியோர் இணைந்து மேற்கொண்டனர்.

மவுஸ்ஸாக்கலை நீர்தேகத்தில் கரையோர பகுதிகள் மற்றும் நீரேந்தும் பகுதிகளில் நிரம்பி இருக்கும் குப்பைகளே இவ்வாறு அகற்றப்பட்டன.

அதேவேளை எதிர்வரும் காலத்தில் மவுஸ்ஸாக்கலை நீரேந்தும் பகுதிகளிலும் மற்றும் நீர் உள்வாங்கும் பகுதிகளிலும் காணப்படும் நீர் ஓடைகளில் பொதுமக்கள் கழிவுகளை கொட்டுவார்களாயின் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg