Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிணற்றுக்குள்ளிருந்து வயோதிபரின் சடலம் கண்டெடுப்பு!

In இலங்கை
Updated: 09:41 GMT, Mar 18, 2018 | Published: 09:40 GMT, Mar 18, 2018 |
0 Comments
1107
This post was written by : poovannan

ஏறாவூர் – முறக்கொட்டாஞ்சேனையில் வயோதிபரான குடும்பஸ்தரின் சடலத்தை அவரது வீட்டுக் கிணற்றிலிருந்து நேற்று (சனிக்கிழமை) மாலை கண்டெடுத்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

முறக்கொட்டான்சேனை மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த விநாயகமூர்த்தி யோகராசா (வயது 60) என்பவரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அவரது மனைவி மயக்கமுற்ற நிலையில் இருந்ததாகவும் வீட்டில் இரத்தக் கறைகள் காணப்பட்டதாகவும் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக பல கோணங்களில் விசாரணை செய்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg