காவிரி மேலாண்மை வாரியம் இம்மாத இறுதிக்குள் நிறைவு! – தமிழிசை
நாட்டில் வறட்சியான காலநிலை ஏற்படுவதற்கு முன்னர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுமென, பா.ஜ.க.வின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இந்த காவிரி மேலாண்மை வாரியத்தை எதிர்வரும் 30ஆம் திகதிக்குள் அமைத்து முடிப்பதற்கான நடவடிக்கையை பா.ஜ.க. முன்னெடுக்குமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் இடம்பெற்ற ஊடகச்சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
காவிரி தொடர்பில் உச்சநீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பினை பா.ஜ.க. கட்டாயம் நிறைவேற்றுமெனவும் அவர் இதன்போது உறுதியளித்துள்ளார்.
இதேவேளை, காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறு வாரங்களுக்குள் அமைக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இவ்விடயம் தொடர்பாக மத்திய அரசுக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.