Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அஃப்ரின் பிராந்தியம் படையினர் வசம்

In உலகம்
Updated: 10:00 GMT, Mar 18, 2018 | Published: 10:00 GMT, Mar 18, 2018 |
0 Comments
1150
This post was written by : Suganthini

சிரியாவின் அஃப்ரின் பிராந்தியத்தின் மையப்பகுதியை, துருக்கிய ஆதரவுப்; படையினர் தமது முழுமையான கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ளதாக, துருக்கிய ஜனாதிபதி ரெஸில் தையிப் ஏர்டோகன் தெரிவித்துள்ளார்.

அஃப்ரின் பிராந்தியத்தின் மையப்பகுதி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை படையினர் தமது கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ள நிலையில், துருக்கியப் படையினர் தமது நாட்டுத் தேசியக்கொடியை தொங்கவிட்டுள்ளனர்.

சிரிய –துருக்கிய எல்லையிலுள்ள அஃப்ரின் பிராந்தியத்தில் நிலைகொண்டிருந்த குர்திஷ் போராளிகளுக்கும் படையினருக்குமான மோதல் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக இடம்பெற்றுவந்தது. இந்த மோதலில் அகப்பட்டு சுமார் 280 பேர் உயிரிழந்ததாக மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் கூறியபோதும், துருக்கிய இதனை நிராகரித்துள்ளது.

மேலும், இந்த மோதல் காரணமாக, அப்ஃரின் பிராந்தியத்திலிருந்து சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg