Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சசிகலாவின் கணவனை சந்தித்த தினகரன்

In இந்தியா
Updated: 11:16 GMT, Mar 18, 2018 | Published: 10:34 GMT, Mar 18, 2018 |
0 Comments
1107
This post was written by : Varatharajan Yuganthini

சென்னை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்ற சசிகலாவின் கணவன் ம.நடராஜனை ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி தினகரன் சென்று சந்தித்துள்ளார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருச்சிக்கு பயணத்தை மேற்கொள்ளவிருந்த நிலையில் அப்பயணத்தை இரத்து செய்துவிட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவின் கணவனை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

நடராஜனின் உடல்நிலை மோசமான நிலைமையில் உள்ளதாகவும் அவருக்கு மருத்துவ குழுவினால் தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் வைத்தியசாலை நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கின்றது.

சசிகலாவின் கணவர் நேற்று இரவு நெஞ்சுவலி காரணமாக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg