Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பங்களாதேஷ் வீரர்களை விமர்சித்த ஜெயசூரிய

In கிாிக்கட்
Updated: 12:26 GMT, Mar 18, 2018 | Published: 11:41 GMT, Mar 18, 2018 |
0 Comments
2681
This post was written by : Velauthapillai Kapilan

இலங்கை அணிக்கு எதிரான போட்டியின் போது பங்களாதேஷ் வீரர்கள் நடந்து கொண்டமையானது மூன்றாம் தரத்தினர் போல அமைந்தது என இலங்கையின் முன்னாள் அணித்தலைவர் சனத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த போதும்   சிறிது நேரத்தில் அந்த பதிவை  நீக்கியுள்ளதாகவும்  தெரிவிக்கபடுகிறது.

இலங்கை ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்றுவரும் முத்தரப்பு T-20 போட்டியில் இடம்பெற்று வருகிறது.

இதில் இறுதிச்சுற்றுக்குள் நுழைவதற்கான இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கிடையான போட்டியில் கடந்த (வெள்ளிக்கிழமை) இலங்கை அணியை வீழ்த்தி பங்களாதேஷ் அணி இறுதிச்சுற்றுக்கு தெரிவானது.

அதன்போது பங்களாதேஷ் வீரர்களின் உடை மாற்றும் அறை கண்ணாடி கதவு உடைக்கப்பட்டது. போட்டி நடைபெற்ற வேளையில் சண்டை என பங்களாதேஷ் வீரர்களின் செயற்பாடுகள் பலரையும் முகம் சுளிக்க வைத்தது.

எனவே இது தொடர்பில் முன்னாள் தலைவர் சனத் ஜெயசூரிய இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg