Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதிய கிரகம் தொடர்பில் ஸ்டீபன் கூறியது என்ன?

In
Updated: 11:46 GMT, Mar 18, 2018 | Published: 11:10 GMT, Mar 18, 2018 |
0 Comments
1077
This post was written by : Kemasiya

பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கின் அனைவரும் சிந்திக்கும் கருத்துக்களை முன்வைப்பவர் என்பதை மறுக்க முடியாது. அந்த வகையில் அவர் கூறிய கருத்துக்களில் ஒன்றே 1992ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட புதிய கிரகம் தொடர்பானது.

இக் காலப்பகுதியில் நமது சூரியனை சுற்றாமல் வேறொரு சூரியனை சுற்றிக்கொண்டிருந்த ஒரு புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பில் கூறிய ஸ்டீபன் ஹாக்கிங்கின்,

ஒரு சூரியன், பூமி மற்றும் இந்த இரண்டிற்கும் இடையிலான தூரம், சூரியனின் நிறை என நமது சூரிய மண்டலத்தின் வானியல் கூட்டமைப்பு தற்செயலானது என்பதையே இந்த கண்டுபிடிப்பு உணர்த்துகிறது. மனிதர்களை மகிழ்விப்பதற்காக பூமி கிரகம் மிகவும் கவனமாக இருந்ததை நம்புவதற்கு தேவையான ஆதாரங்கள் இல்லை.

பிரபஞ்சம் உருவாவதற்கு காரணம் ஈர்ப்புவிசை விதியே என்று அவர் திடமாக தெரிவித்தார்.

ஹாக்கிங் கூறுகிறார், ஈர்ப்பு விதிகளின் காரணமாக பிரபஞ்சம் சுயமாகவே பூஜ்ஜியத்திலிருந்து மீண்டும் ஒருமுறை தொடங்கலாம். நமது இருப்புக்கும், பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கும் பொறுப்பு திடீரென்று நிகழும் வானியல் நிகழ்வுகள்தான்,

இதற்கு கடவுளின் அவசியம் தேவையில்லை என்றார். ஸ்டீஃபன் இந்த கருத்துக்கு கிறித்துவ மத குருக்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்தமை குறிப்பிடித்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg