Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை: ராகுல் குற்றச்சாட்டு

In இந்தியா
Updated: 13:46 GMT, Mar 18, 2018 | Published: 13:46 GMT, Mar 18, 2018 |
0 Comments
1144
This post was written by : Varatharajan Yuganthini

இந்தியா வளர்ச்சியடைந்து வரும் நாடாக இருக்கின்ற போதிலும் இங்குள்ள பெரும்பாலான இளைஞர்கள் வேலைவாய்ப்பு அற்றவர்களாகவே உள்ளார்களென காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, “நாட்டிலுள்ள  இளைஞர்களிடம் என்ன தொழில் செய்கின்றீர்களென கேட்டால் அவர்களிடமிருந்து வருகின்ற பதில் ஒன்றுமில்லை என்பதாகும்.

ஆட்சியில் இருக்கின்ற அரசாங்கம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவது தொடர்பில் எந்ததொரு செயற்பாட்டையும் முன்னெடுத்ததாகத் தெரியவில்லை.

மேலும் மோடியின் அரசாங்கம் ஊழல் மோசடியில் ஈடுபடுபவர்களுக்கு தங்களின் ஆதரவுகளை வழங்கிப் பாதுகாத்து வருகின்றது.

நாட்டில் காணப்படுகின்ற முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்காமல் அமைதியான முறையில் மோடி இருக்கின்றார்.

காங்கிரஸ் உண்மை பேசுவதை ஒருபோதும் தடுக்க முடியாது. மக்களின் குரலாக எப்போதும் காங்கிரஸ் செயற்படும்’ என ராகுல்காந்தி மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg