Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாடு திரும்பிய யுவதி சடலமாக கண்டெடுப்பு

In இலங்கை
Updated: 18:12 GMT, Mar 18, 2018 | Published: 18:12 GMT, Mar 18, 2018 |
0 Comments
1971
This post was written by : Litharsan

சவூதி அரேபியாவிலிருந்து நாடு திரும்பிய பெண்ணொருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, கணேசபுரம் மரக்காரம்பளை வீதியைச் சேர்ந்த இராமலிங்கம் மருதை சுதர்சினி (வயது 33) என்பவரின் சடலமே இன்று (ஞாயிற்றுக்கிழமை) வாழைச்சேனை – கிரான்பற்று பகுதியிலுள்ள மகாவலி கிளை ஆற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வீட்டுப் பணிப்பெண்ணாக சவுதி அரேபியாவில் பணியாற்றிய குறித்த பெண் கடந்த சனிக்கிழமை நாடு திரும்பியுள்ளார் எனவும், ஆனால் அவர் வீட்டுக்கு வருகை தராத நிலையில் இன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பெண்ணின் தலையில் பலமாக வெட்டப்பட்ட காயம் காணப்படுவதால் அவர் கொலைசெய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

நேரில் சென்று சடலத்தைப் பார்வையிட்ட வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி ஹபீப் றிபான், சடலத்தை சட்டவைத்திய அதிகாரியின் உடற் கூற்றுப்பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைவக்கு அனுப்பி வைக்குமாறு வாழைச்சேனை பொலிஸ் பொறுப்பதிகாரி டி.எஸ். பெரமுனவுக்கு உத்தரவிட்டார்.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg