Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரதமர் பதவியை ரணில் இராஜினாமா செய்வார்?

In இலங்கை
Updated: 07:01 GMT, Mar 19, 2018 | Published: 06:03 GMT, Mar 19, 2018 |
0 Comments
1153
This post was written by : Risha

நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர், ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியை இராஜினாமா செய்வார் என நம்புவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இந்த வாரத்தில் நாடாளுமன்ற சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமரையும், அரசாங்கத்தையும் நீக்க வேண்டும் என்பதே ஒன்றிணைந்த எதிரணியின் நோக்கம் எனத் தெரிவித்த மஹிந்த, ஆனால், ரணிலை கட்சித் தலைமை பதவியிலிருந்தும் நீக்க வேண்டும் என ஐ.தே.க.வின் பெரும்பாலான உறுப்பினர்கள் எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரும் நடவடிக்கையில் ஒன்றிணைந்த எதிரணியைவிட தற்போது ஐ.தே.க-வினரே மும்முரம் காட்டி வருவதாகவும் மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg