Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெருசலேமில் கத்திக்குத்து: துப்பாக்கிச்சூட்டில் பலஸ்தீனியப் பிரஜை உயிரிழப்பு

In உலகம்
Updated: 05:34 GMT, Mar 19, 2018 | Published: 05:34 GMT, Mar 19, 2018 |
0 Comments
1140
This post was written by : Suganthini

ஜெருசலேமில், இஸ்ரேலியப் பிரஜையொருவர் மீது கத்திக்குத்தை நடத்திய பலஸ்தீனியப் பிரஜையொருவர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜெருசலேமின் பழைய நகரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தச் சம்பவம் இடம்பெற்றது. இஸ்ரேலியப் பிரஜை மீது கத்திக்குத்தை நடத்திய சந்தேக நபரான பலஸ்தீனியப் பிரஜை அங்கிருந்து தப்பிச்செல்ல முற்பட்டபோது, அப்பலஸ்தீனியப் பிரஜையை பொலிஸார் துரத்திச்சென்ற நிலையில், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார்.

கத்திக்குத்துக்கு இலக்கான இஸ்ரேலியப் பிரஜை ஆபத்தான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் கூறியுள்ளனர்.

புனித நகரான ஜெருசலேமை தமது தலைநகரென இஸ்ரேலும், கிழக்கு ஜெருசலேம் தமது தலைநகரென பலஸ்தீனமும் கூறிவந்த நிலையில், இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த டிசெம்பர் 6ஆம் திகதி ஒருதலைப்பட்சமாக அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, பலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்குமிடையில் குழப்ப நிலைமை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg