Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரஜினியின் கட்சிக்கொடி தயார்! – பெயருக்கு பலத்த போட்டி

In இந்தியா
Updated: 05:52 GMT, Mar 19, 2018 | Published: 05:52 GMT, Mar 19, 2018 |
0 Comments
1150
This post was written by : Varshini

சுப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் கட்சியின் பெயர் மற்றும் கொடியை தெரிவுசெய்யும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கட்சியின் கொடி ஏற்கனவே தயாராகிவிட்டதாகவும் பெயருக்கான பட்டியலில் 10 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டு தினத்தன்று கட்சியின் பெயரையும் கொடியையும் அறிமுகம் செய்வதற்கு எதிர்பார்த்துள்ள நிலையில், அதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது இமயமலை யாத்திரையில் ஈடுபட்டுள்ள நிலையில், யாத்திரையின் பின்னர் இவ்விடயங்கள் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக அரசியலில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் கட்சிக் கொடி அமையவுள்ளதாகவும் அவர் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் தொடர்பில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தான் அரசியலுக்கு வருவதாக கடந்த வருட இறுதியில் அறிவித்திருந்தார்.

அத்தோடு, அரசியலில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் கட்சியின் கொடி, பெயர் மற்றும் மாநாடு என்பன அமையவுள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், அவற்றிற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg