Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொட்டகலை வைத்தியசாலை விவகாரம்: முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பொலிஸில் ஆஜர்

In இலங்கை
Updated: 05:56 GMT, Mar 19, 2018 | Published: 05:56 GMT, Mar 19, 2018 |
0 Comments
1084
This post was written by : Varatharajan Yuganthini

கொட்டகலை பிரதேச வைத்தியசாலை விவகாரம் தொடர்பில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மலர்வாசகம் பொலிஸில் இன்று (திங்கட்கிழமை) ஆஜராகியுள்ளார்.

கொட்டகலை பிரதேச வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக மலர்வாசகம் செயற்பட்டதாகத் தெரிவித்து, அவர் மீது பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் அவர் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை அவர்  திம்புளை – பத்தனை பொலிஸில் ஆஜரானார்.

விபத்ததொன்றில் காயமடைந்த ஒருவருக்கு சிகிச்சை வழங்குவதற்கு வைத்தியர்களுக்கு இடையூறு விளைவித்ததாகவும், வைத்திய நிர்வாக செயற்பாட்டுக்கு எதிராக செயற்பட்டதாகவும் இவர் மீது முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, இச்சம்பவத்திற்கு எதிராக உரிய விசாரணைகளை முன்னெடுத்து தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென குறிப்பிட்டு,

கடந்த வெள்ளிக்கிழமை மலர்வாசகம் மீது முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து அதனை விசாரிக்கும் வரை பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடப்போவதாக கூறி, கடந்த இரண்டு தினங்களாக கொட்டகலை பிரதேச வைத்தியசாலை நிர்வாகத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg