Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரயிலில் மோதுண்டு வயோதிபர் உயிரிழப்பு: யாழில் சம்பவம்

In இலங்கை
Updated: 07:35 GMT, Mar 19, 2018 | Published: 06:11 GMT, Mar 19, 2018 |
0 Comments
1099
This post was written by : Varatharajan Yuganthini

யாழ்ப்பாணம், முள்ளிப் பிரதேசத்தில் ரயிலுடன் மோதுண்டு வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

யாழ்.கொழும்புத் துறையைச் சேர்ந்த செல்லையா கந்தசாமி என்ற 73 வயதுடைய முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொழும்பிலிருந்து யாழ்.நோக்கிப் பயணித்த ரயில் மோதுண்டே இவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

விபத்து இடம்பெற்ற பகுதியில் ரயில் கடவை இல்லாத அதே சந்தர்ப்பத்தில், ஆள்நடமாற்றமும் அற்ற பகுதியென தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், இவ்விபத்து தொடர்பில் பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg