Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டோனி – கோஹ்லி தோழமை தொடர்பில் BCCI தலைவர் உணர்ச்சிப் பேட்டி!

In கிாிக்கட்
Updated: 07:39 GMT, Mar 19, 2018 | Published: 07:21 GMT, Mar 19, 2018 |
0 Comments
1213
This post was written by : Velauthapillai Kapilan

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி மற்றும் மூத்த வீரர் மகேந்திர சிங் டோனி ஆகியோருக்கு இடையில் சிறந்த நட்புறவு நீடிப்பதாக பி.சி.சி.ஐ. நிர்வாகக்குழுவின் தலைவர் வினோத்ராய் தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இரு வீரர்களுக்கு இடையிலும் பரஸ்பர நம்பிக்கையும், ஒருவர் மீது மற்றவர் மரியாதையும் வைத்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும், 20-20 ஓவர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மகேந்திரசிங் டோனிக்கு நிகராக யாருமில்லையென  இ பி.சி.சி.ஐ. நிர்வாகக் குழுவில் விராட் கோஹ்லி கூறியதாகவும் வினோத் ராய் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

போட்டி நடைபெறும்போது அப்போட்டியின் போக்கை கணிக்கும் டோனியின் திறனை இந்திய அணியின் சொத்தாக கருதும் விராட் கோஹ்லி, விக்கெட் காப்பாளராக (Wicket Keeping) விளையாடுவதில் டோனியின் வேகத்தை விஞ்சும் வீரர் இல்லை எனவும் வினோத் ராய் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg