Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்காவின் ஆதிக்கத்துடன் நிறைவடைந்தது பாராலிம்பிக்!

In கிாிக்கட்
Updated: 07:29 GMT, Mar 19, 2018 | Published: 07:29 GMT, Mar 19, 2018 |
0 Comments
1124
This post was written by : Arul Jesu

2018 ஆம் ஆண்டுக்கான குளிர்கால பாராலிம்பிக் போட்டிகள் நேற்று நிறைவுக்கு வந்துள்ளன. இதனை முன்னிட்டு பியோங் சேங் நகரில் அமைக்கப்பட்ட பிரதான அரங்கில் பிரமாண்டமான முறையில் நிறைவு விழா நடைபெற்றது.

கண்ணைக்கவரும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மேடை, பல்வேறுபட்ட கலை நிகழ்வுகளால் களைகட்டியது.

தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜெ இன் மற்றும் அவரது பாரியார் கிம் ஜங்க் சூக் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு வண்ணவிளக்குகளின் அலங்காரங்களையும் இசை நிகழ்ச்சிகளையும் கண்டுகளித்திருந்தனர்.

கடந்த பல நாட்களாக நடைபெற்ற இந்த போட்டிகளில் 49 நாடுகளில் இருந்து 567 போட்டியாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இறுதியில் ஐக்கிய அமெரிக்கா ஆறு தங்கம், 15 வெள்ளி, 8 வெண்கலம் அடங்களாக 21 பதக்கங்களை பெற்று பதக்க பட்டியலில் முதலிடத்தை பெற்றது.

இரண்டாவது இடத்தை நடுநிலை பாரலிமிக் தடகள வீர்கள் அணியும், மூன்றாவது இடத்தை கனடாவும் பெற்றுக் கொண்டன.

நிகழ்ச்சியின் நிறைவில் சர்வதேச பாராலிம்பிக் தலைவர் ஆன்ரியு பார்சன அண்மையில் மறைந்த முதுபெரும் விஞ்ஞானி ஸ்டீபன் ஹேக்கிங் கு அஞ்சலி செலுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

ஆத்துடன் ‘கீழே கால்களை பார்க்காதீர்கள் மேலே உள்ள நட்சத்திரங்களை பாருங்கள்’ எனும் புகழ் மிக்க ஸ்டீபன் ஹேக்கிங்கின் வார்த்தைகளை கோடிட்டு காட்டியமையும் குறிப்பிடத்தத்க்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg