Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஏழாவதாக களமிறக்கப்பட்டதால் தினேஷ் கார்த்திக் அதிருப்தி

In கிாிக்கட்
Updated: 10:13 GMT, Mar 19, 2018 | Published: 08:49 GMT, Mar 19, 2018 |
0 Comments
2070
This post was written by : Velauthapillai Kapilan

நடைபெற்று முடிந்த முத்தரப்பு T-20 போட்டியின் இறுதிப் போட்டியில் ஏழாவது வீரராக களமிறக்கப்பட்டதால், இந்திய அணியின் வீரர் தினேஷ் கார்த்திக் அதிருப்தி அடைந்ததாக அணியின் தலைவர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கிண்ண முத்தரப்பு T-20 போட்டியின் இறுதிப்போட்டி ஆர்.பிரேமதாச மைதானத்தில் கடந்த வாரம்  இடம்பெற்றது.

இதில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதிக்கொண்டன. இந்நிலையில் 6வது வீரராக களமிறங்க வேண்டிய தினேஷ் கார்த்திக், 2 ஓவர்களில் 34 ஓட்டங்களை எடுத்தால்தான் வெற்றி பெற முடியும் என்ற இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டார். இதன்போது தினேஷ் கார்த்திக்கை ஏழாவதாக களமிறங்குமாறு ரோஹித் சர்மா பணித்துள்ளார். அவ்வாறு களமிறக்கப்பட்டதால் தினேஷ் கார்த்திக் அதிருப்தி அடைந்ததாக ரோஹித் தெரிவித்துள்ளார்.

எனினும், தினேஷ் கார்த்திக் 8 பந்துகளில் 29 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

எவ்வாறாயினும், போட்டியில் வெற்றி பெற்றதால் தற்போது தினேஷ் கார்த்திக் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், இந்த வெற்றி அவருக்கு மிகப்பெரிய அளவில் நம்பிக்கையை எற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் ரோஹித் சர்மா தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg