Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.பி.எல். போட்டியில் என்ன நடக்கிறது? – மனம் திறந்தார் நடன அழகி!

In கிாிக்கட்
Updated: 11:12 GMT, Mar 19, 2018 | Published: 09:47 GMT, Mar 19, 2018 |
0 Comments
1556
This post was written by : Velauthapillai Kapilan

இந்தியாவில் ஆண்டுதோறும் இடம்பெற்றுவரும் ஐ.பி.எல் T-20 தொடர் குறித்து நடன அழகி ஒருவர் ஊடகம் ஒன்றிற்கு தனது கருத்தை வெளிப்படையாக தெரிவித்திருந்தார். ஐ.பி.எல். தொடரின் 11வது பருவம் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன் ரெடிட் என்ற நடன அழகி ஒருவர் அளித்திருந்த குறித்த பேட்டி தொடர்பில் மீண்டும் பேசப்பட்டு வருகின்றது.

இந்தியாவில் ஆண்டு தோறும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டு வரும் இத்தொடரை பிரபலமாக்கிய பெருமை நடன அழகிகளுக்கு உண்டு. இந்த நடனத்தின் மூலமாகவே முதலாவது ஐ.பி.எல் தொடர் பிரபலமடைந்தது. அதுமட்டுமின்றி நடன அழகிகள் குறித்த விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில் முதல் தொடரில் பெரும் சர்ச்சையை உண்டாக்கிய நடன அழகிகளின் நடனத்தைத் தொடர்ந்து, ஒவ்வொரு வருடமும் நடன அழகிகள் குறித்த சர்ச்சைகள் எழுந்தவண்ணமிருந்தன. இந்நிலையில் இந்த வருடமும் சர்ச்சைகள் வெளிவர வாய்ப்புகள் உள்ளதாக கிரிக்கெட் ஆவலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தற்போது ஐ.பி.எல். தொடர் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் ரெடிட் என்ற நடன அழகி வழங்கிய மீண்டுமொருமுறை நினைவுபடுத்தலாம்.

கேள்வி: இந்தியாவில் அழகான பெண்கள் இருக்கும் போது உங்களை ஏன் தேர்ந்தெடுக்கிறார்கள் ?

பதில்: எங்களுடன் இந்திய பெண்களும் சேர்ந்து நடனமாடுவதை பார்க்க ஆசைதான். ஆனால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது. அது எனக்கு கொடுக்கப்பட்ட வேலை, ஒருவேளை நான் பதவி விலகிவிட்டாலும், அந்த இடத்திற்கு வேறு ஒரு வெள்ளைக்கார பெண்தான் வருவார் என்பதில் சந்தேகம் இல்லை.

கேள்வி: நீங்கள் மைதானத்தில் நடனமாடும் போது ஒட்டுமொத்த ரசிகர்களின் பார்வையும் உங்கள் மீது தான் இருக்கும். ரசிகர்கள் சிலர் அத்துமீறும் போது எப்படி உணர்வீர்கள் ?

பதில்: நான் அதனை எப்பொழுதும் முழுமையாக வெறுக்கிறேன்.

கேள்வி: நீங்கள் ஊக்கப்படுத்தும் அணியின் துடுப்பாட்ட வீரர்கள், விரைவாக விக்கெட்டை இழந்துவிட்டால் உங்களுக்கு வேலை இருக்காதே! இதற்காக உங்கள் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் விரைவில் விக்கெட்டை இழக்கவேண்டுமென ரகசியமாக மனதுக்குள் விரும்புவீர்களா?

பதில்: நிச்சயமாக இல்லை. இதுவொரு பொழுது போக்கான விசயம். இதில் எங்களுக்கு சலிப்பு ஏற்படாது.

கேள்வி: ஐ.பி.எல் தொடர் நடைபெறாத சந்தர்ப்பங்களில் உங்கள் வேலை என்ன ?

பதில்: பொலிவுட்டில் பின்னணி கலைஞராக வேலை செய்து வருகிறேன்.

கேள்வி: நீங்கள் எந்த அணியின் நடன அழகியாக இருக்கிறீர்கள் ?

பதில்: அதை என்னால் கூற முடியாது. அதை கூறும் அதிகாரம் எனக்கு இல்லை.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg