Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆடைத் தொழிற்சாலையில் வாயு கசிவு: 37 பேர் பாதிப்பு

In இலங்கை
Updated: 12:30 GMT, Mar 19, 2018 | Published: 12:20 GMT, Mar 19, 2018 |
0 Comments
1073
This post was written by : Varatharajan Yuganthini

ஜா-எல, ஏக்கல பகுதியிலுள்ள ஆடை தொழிற்சாலையொன்றில் திடீரென ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக 37 ஊழியர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (திங்கட்கிழமை) நண்பகல் இச்சம்பவம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த தொழிற்சாலையிலுள்ள குளிரூட்டியில் ஏற்பட்ட கோளாறே வாயு கசிவு ஏற்படுவதற்கு காரணமென சந்தேகிக்கும் ராகம பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg