Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாவட்ட செயலகங்களில் வழிபாட்டுத்தலம் அமைப்பது முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் :ஜி.ரி.லிங்கநாதன்

In இலங்கை
Updated: 14:10 GMT, Mar 19, 2018 | Published: 14:00 GMT, Mar 19, 2018 |
0 Comments
1076
This post was written by : poovannan

மாவட்ட செயலகங்களில் மத வழிபாட்டுத்தலம் அமைப்பது எதிர்காலத்தில் தேவையற்ற முரண்பாடுகளை ஏற்படுத்தும் என வட. மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியா – கோவில்குளம் இந்துக் கல்லூரியில் புனரமைக்கப்பட்ட ஸ்ரீ இந்து வித்தக விநாயகர் ஆலயத்தை வழிபாட்டுக்காக இன்று (திங்கட்கிழமை) திறந்துவைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், “மாவட்ட செயலகத்தில் மத வழிபாட்டுத் தலத்தை அமைப்பது தேவையற்ற முரண்பாடுகளை எதிர்காலத்தில் ஏற்படுத்தும். மத வழிபாட்டுத்தலம் பாடசாலை மற்றும் வைத்தியசாலையில் அமைப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது.

வவுனியா மாவட்ட செயலகத்தில் மத வழிபாட்டுத்தலம் ஒன்றை நிறுவுவதற்கு புதிதாக வந்த அரச அதிபர் நடவடிக்கை எடுத்திருந்தார். இருந்தும் மக்கள் பிரதிநிதிகளின் எதிர்ப்பு காரணமாக தற்காலிகமாக அது இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அரச அலுவலங்களில் மத வழிபாட்டுத்தலங்களை உருவாக்குவது தேவையற்ற விடயம். அவ்வாறு அமைப்பதன் நோக்கம் சந்தேகத்திற்குரியது ” எனத் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg